நன்கொடை

அனைத்து பாவங்களையும்  நீக்கி அனைத்து மங்களங்களையும் அருளும் பிரார்த்தனா மூர்த்தியான பெருமாளுக்கு  நன்கொடை அளிக்க விரும்பும் பக்தர்கள் கீழ்க்காணும் முகவரிக்கு பணமாக ,வங்கி வரைவோலையாக காசோலையாக அனுப்பலாம்.

அல்லது கீழே குறிப்பிடப்பட்டுள்ள வங்கிகணக்கில்  நேரடியாகவோ அல்லது இணைய சேவைகளின் மூலமாகவோ பணம் செலுத்தி  திருக்கோயில் அலுவலகத்தில் விபரம் தெரிவிக்கலாம்

 தொடர்பு முகவரி:

செயல் அலுவலர் 

அருள்மிகு சக்கரபாணிசுவாமி  திருக்கோயில்

கும்பகோணம்-612001

தஞ்சாவூர் மாவட்டம்.

வங்கி கணக்கு:

A/C NO : 1857433147

IFSC CODE : CBIN0280895

BANK NAME : CENTRAL BANK OF INDIA

BRANCH: KUMBAKONAM

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!

தானங்களில் தலையாயது அன்னதானம். வெளியூரிலிருந்து திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கும், உணவுக்கு வழியின்றி தவிக்கும் ஏழைகளுக்கும் உணவளிப்பதற்காக செயல்படுத்தப்பட்டு வரும் அன்னதான திட்டத்தில் பங்கேற்க விரும்பும் அன்பர்கள் கீழ்க்காணும் விபரங்களை பயன்படுத்தி நன்கொடை அளித்து ஸ்ரீசக்கரராஜாவின் அருள் பெறுவீர்!

அன்னதானம்

இதிருக்கோயிலில் அன்னதானத்திட்டம் 14.01.2006 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.தினந்தோரும் 50 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.அன்னதானத்திட்டத்தில் பங்கேற்க விரும்பும் பக்தர்களுக்காக இத்திருக்கோயிலில் நிரந்திர அன்னதானக்கட்டளை செயல்படுத்தப்பட்டு வருகிறது. நன்கொடையாளர்கள் நிரந்திர வைப்புதொகையாக ரூ.20,000/- செலுத்தி அதன் மூலம் கிடைக்கும் வட்டித் தொகையிலிருந்து வருடத்தில் ஒருமுறை மணநாள்,பிறந்த நாள், குழந்தைகள் பிறந்த நாள்,நினைவு நாள் போன்ற நன்கொடையாளர் விரும்பும் சிறப்பு நாட்களில் நன்கொடையாளர் பெயரில் அன்னதானம் வழங்கப்படும்.ஒருநாள் மட்டும் நன்கொடை அளிக்க விரும்பும் பக்தர்கள் தோராய ஒருநாள் அன்னதான செலவான ரூ.2000/- செலுத்தி அன்னதான திட்டத்தில் பங்கேற்கலாம்.

பணம்,வரைவோலை மற்றும் காசோலை அனுப்ப வேண்டிய முகவரி:

செயல் அலுவலர்
அன்னதானத்திட்டம்
அருள்மிகு சக்கரபாணி சுவாமி திருக்கோயில்
கும்பகோணம்.
தஞ்சாவூர் மாவட்டம்.

இணையதளத்தின் மூலம் நன்கொடை அளிக்க விரும்பும் அன்பர்கள் கீழே உள்ள விபரங்களை பயன்படுத்தி அளிக்கலாம். இச்சேவை முற்றிலும் விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகும்.மேலும் நன் கொடை தொகைக்கு 80 G வரி விலக்கு உண்டு.

A.C NO : 457262966 

IFSC CODE : IDIB000K144

BANK NAMEINDIAN BANK

BRANCHKUMBAKONAM 

திருக்கோயிலின் நடை திறந்திருக்கும் நேரம்

காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை  —  மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை

Close Menu
Translate