அருள்மிகு சக்கரபாணி சுவாமி திருக்கோயில்

முக்கிய திருவிழாக்கள்

மாசிமகப் பெருவிழா

---உலகின் உன்னத திருவிழாக்களில் ஒன்று---

இந்த மகத்தான திருவிழாவுக்கு நன்கொடை அளித்து கைங்கர்யம் செய்ய கீழே சொடுக்கவும்

முக்கிய திருவிழாக்கள்

--- Important Festivals ---

மாசிமகம்

 ஒவ்வொரு வருடமும் இத்திருக்கோயிலில் மாசிமஹோத்சவம் எனப்படும் மாசிமகப் பெருவிழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.மாசி மாதம்  மகம் நட்சத்திரத்தில் நிகழும் திருத்தேரோட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும் மலர்கள் மூலிகைகள் 

  உட்பட 108  வகையான திவ்ய மங்கள பொருட்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் ஸ்ரீசக்கரபாணி சுவாமி  தம் தேவியர்களுடன் எழுந்தருளி திருவீதி பவனி வரும் அற்புதக்காட்சி காண்போர் இதயங்களில் பரவசத்தை ஊற்றெடுக்கச் செய்யும்.மேலும் திருத்தேரோட்டம் முடிவுற்ற பின்னர் காவிரிக்கரையில் உள்ள சக்கரப்படித்துறையில் தீர்த்தவாரி நடைபெறும்.

திருப்பள்ளி ஓடத் திருவிழா

ஒவ்வொரு வருடமும் இத்திருக்கோயிலில் தெப்போற்சவம் எனப்படும் திருப்பள்ளி ஓடத்திருவிழா  மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.வைகாசி மாதம் பௌர்ணமி திதியில் அமிர்த புஷ்கரணி திருக்குளத்தில் பாற்கடல் மேல் பாம்பணை போன்ற 

தோற்றத்தில் அமைக்கப்பெறும் திருப்பள்ளி ஓடத்தில் ஸ்ரீசக்கரபாணி சுவாமி தம் தேவியர்களுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

வசந்த உற்சவம்

 ஒவ்வொரு வருடமும் இத்திருக்கோயிலில் வசந்த உற்சவம்  மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.ஆனி மாதம்  சுக்லபட்ச ஏகாதசியில் ஆரம்பித்து 5 நாட்கள் வசந்த உற்சவம் மிகச்சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. அதுசமயம்   ஸ்ரீசக்கரபாணி சுவாமி  

திருக்கோயில் நந்தவனத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் தம் தேவியர்களுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

பவித்ரோற்சவம்

ஒவ்வொரு வருடமும் இத்திருக்கோயிலில் பவித்ரோற்சவம் மிகச் சிறப்பாக நிகழ்த்தப்பட்டு வருகிறது.ஆவணி அவிட்டத்தில் தொடங்கி 7 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவமானது மிகவும் வைதீகமான முறையில் சிறப்பாக நடத்தப்படுவதால், விழா நாட்களில் திருக்கோயில் வந்து சுவாமியை தரிசித்தால் அளவற்ற நற்பயனை பெறலாம்.

ஜேஷ்டாபிஷேகம்

ஒவ்வொரு வருடமும் இத்திருக்கோயிலில் ஜேஷ்டாபிஷேகம்  மிகச் சிறப்பாக நிகழ்த்தப்பட்டு வருகிறது.ஆடி மாதம் சுக்ல பட்ச ஏகாதசி அன்று  நடைபெறும் ஜேஷ்டாபிஷேகத்தில் மூலவர் மற்றும் உற்சவர் திருமேனிக்கு திருமஞ்சனம் நடைபெற்று   ஸ்ரீசக்கரபாணி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 

ஸ்ரீசுதர்சன ஜெயந்தி

 ஒவ்வொரு வருடமும் இத்திருக்கோயிலில் ஸ்ரீசுதர்சன ஜெயந்தி மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.ஆனி மாதம்  சித்திரை      நட்சத்திரத்தில் கொண்டாடப் பெறும் ஸ்ரீசுதர்சன ஜெயந்தி அன்று மூலவர் மற்றும் உற்சவர் திருமேனிக்கு திருமஞ்சனம் 

நடைபெற்று   ஸ்ரீசக்கரபாணி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

திருக்கல்யாண உற்சவம்

 ஒவ்வொரு வருடமும் இத்திருக்கோயிலில் திருக்கல்யாண  உற்சவம்  மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.பங்குனி மாதம்  திருவோண  நட்சத்திரத்தில் சுவாமி திருக்கல்யாணம் எழிலுற அமைக்கப்பட்ட திருமேடையில் 

இனிதே நடைபெறும். அடுத்தநாள் ஸ்ரீசக்கரபாணி சுவாமி  தம் தேவியர்களுடன் படிச்சட்டத்தில் எழுந்தருளி திருவீதி புறப்பாடு நடைபெறும்.

ஊஞ்சல் உற்சவம்

ஒவ்வொரு வருடமும் இத்திருக்கோயிலில் ஊஞ்சல் உற்சவம்மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மார்கழி மாதம் முதல் தேதியில் தொடங்கி 5 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் பங்கேற்பவர்களின் பிரார்த்தனைகள் உடன் 

நிறைவேறுகின்றன என்பது தனிச்சிறப்பு

இதர திருவிழாகள்

--- other festivals---

அனுமாத மகப்புறப்பாடு

ஒவ்வொரு மாதமும் மக நட்சத்திரம் அன்று சுவாமி படிச்சட்டத்தில் எழுந்தருளி உள் வீதி புறப்பாடு நடைபெறும்

தட்சணாயண வாசல் திறப்பு

ஆவணி மாதத்தின் இறுதி நாள் சாயுங்கால வேளையில் தட்சணாயண வாசல் கதவு திறக்கப்படும்.

உத்ராயண வாசல் திறப்பு

தை மாதம் முதல் தேதியில் காலைப்பொழுதில் உத்ராயண வாசல் கதவு திறக்கப்படும்.

நவராத்திரி அம்பெய்தல்

நவராத்திரி நாட்களில் சிறப்பு அலங்காரத்தில் தாயார் எழுந்தருளலும்,விஜயதசமியில் சுவாமி குதிரை வாகனத்தில் அம்பெய்தலும் நடைபெறும்

ஐப்பசி கடைமுக தீர்த்தவாரி

ஐப்பசியில் தீபாவளி அன்று சுவாமிக்கு எண்ணெய் சாற்றலும்.மாத இறுதியில் கடைமுக தீர்த்தவாரியும் ந்டைபெறும்

பொற்றாமரை திருச்சுற்று

தை அமாவாசை அன்றும் பங்குனி உத்திரம் அன்றும் பொற்றாமரைக்குள திருச்சுற்று நடைபெறும்

திருவிழா புகைபடக் கூடம்

--- Festivals Photo Gallery ---

காணொளி கூடம்

--- Video Gallery ---
Most frequent questions and answers
Most frequent questions and answers
Most frequent questions and answers

திருக்கோயிலின் நடை திறந்திருக்கும் நேரம்

காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை  —  மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை

Close Menu
Translate