அருள்மிகு சக்கரபாணி சுவாமி திருக்கோயில்

இணைய உண்டியல்

தொலைதூரத்தில் வசிக்கும் ஸ்ரீசக்கரராஜாவின் பக்தர்கள் இணையதளத்தின் மூலம் நன்கொடை அளிக்கலாம்.பக்தர்கள் திருக்கோயில் வங்கி கணக்கு விபரங்களை பயன்படுத்தி வங்கியில் நேரடியாகவோ இணையதள பண பரிவர்த்தனை மூலமோ நன்கொடை மற்றும் கட்டணங்களை செலுத்தலாம். இது விதிகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டதாகும்.

நன்கொடை

கண்கண்ட கலியுக தெய்வமாம் ஸ்ரீசக்கரராஜாவுக்கு நன்கொடை அளிக்க விரும்பும் பக்தர்கள் கீழே காணப்படும் இணைப்பில் உள்ள விபரங்களை  பயன்படுத்தி நன்கொடை அளிக்கலாம்.பக்தர்கள் தாம் செலுத்த விரும்பும் தொகையோடு வங்கிகளின் சேவை கட்டணத்தையும் கணக்கிட்டு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.வங்கி சேவை கட்டணம் போக மீதமிருக்கும் தொகையே திருக்கோயில் கணக்கிற்கு வரவு வைக்கப்படும்.இச்சேவை விதிகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டதாகும்

அன்னதானம்

"...உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே..."

இத்திருக்கோயிலில் திருக்கோயிலில் அன்னதானத்திட்டம் 14.01.2006 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.தினந்தோறும் 50 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.அன்னதானத்திட்டத்தில் பங்கேற்க விரும்பும் பக்தர்களுக்காக இத்திருக்கோயிலில் நிரந்திர அன்னதானக்கட்டளை செயல்படுத்தப்பட்டு வருகிறது. நன்கொடையாளர்கள் நிரந்திர வைப்புதொகையாக ரூ.20,000/- செலுத்தி அதன் மூலம் கிடைக்கும் வட்டித் தொகையிலிருந்து வருடத்தில் ஒருமுறை மணநாள்,பிறந்த நாள், குழந்தைகள் பிறந்த நாள்,நினைவு நாள் போன்ற நன்கொடையாளர் விரும்பும் சிறப்பு நாட்களில் நன்கொடையாளர் பெயரில் அன்னதானம் வழங்கப்படும்.ஒருநாள் மட்டும் நன்கொடை அளிக்க விரும்பும் பக்தர்கள் தோராய ஒருநாள் அன்னதான செலவான ரூ.2000/- செலுத்தி அன்னதான திட்டத்தில் பங்கேற்கலாம்.
பணம்,வரைவோலை மற்றும் காசோலை அனுப்ப வேண்டிய முகவரி:

செயல் அலுவலர்
அன்னதானத்திட்டம்
அருள்மிகு சக்கரபாணி சுவாமி திருக்கோயில்
கும்பகோணம்.
தஞ்சாவூர் மாவட்டம்.

இணையதளத்தின் மூலம் நன் கொடை அளிக்க விரும்பும் அன்பர்கள் கீழே உள்ள இணைப்புகளில் உள்ள விபரங்களை பயன்படுத்தி அளிக்கலாம்.இச்சேவை முற்றிலும் விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகும்.மேலும் நன் கொடை தொகைக்கு 80 G வரி விலக்கு உண்டு.

திருக்கோயிலின் நடை திறந்திருக்கும் நேரம்

காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை  —  மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை

Close Menu
Translate